“பணத்தை கொட்டுறேன்னு கதவை தட்டுறானுங்களே “-ஒரு பெண்ணுக்கு பலமுறை நடந்த கொடுமை

டெல்லியில் உள்ள மதுராவில் கோசிகாலன் காலனியில் ஒரு 17 வயதான பெண் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணை சில நாட்களுக்கு முன்பு இருவர் கடத்தி சென்று விட்டனர் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை வேறு ஒரு நபரிடம் விற்று விட்டனர் .அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றார் .இதனால் அவர் பல வாடிக்கையாளர்களை அந்த பெண்ணிடம் கூட்டி வந்தபோதெல்லாம் அந்த பெண் அதற்கு சம்மதிக்காமல் வீட்டினுள் சென்று கதவை பூட்டி கொள்வார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்துவார்.

இப்படியாக அந்த பெண் பலான தொழிலுக்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் போதெல்லாம் அந்த நபர் அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இது பற்றி தன்னுடைய தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பிறகு அந்த தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கூறினார் .பின்னர் போலீசார் அந்த பெண் இருக்குமிடத்திற்கு சென்று அவரை மீட்டு வந்தனர் .ஆனால் அந்த குற்றவாளி தப்பியோடிவிட்டார் .அதன் பிறகு அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, குற்றவாளிகள் மூவர் மீது எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Contact Us