“பொழுது விடிஞ்சதும் பொண்டாட்டியையும் ,புது காரையும் காணோமே” – கதறும் கணவன்

 

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதான கார் வியாபாரியொருவர் தன்னுடைய 30 வயதான மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசதியாக வாழ்ந்து வந்தார் .அவர் அடிக்கடி பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்று விடுவார் .அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ள காதல் உருவானது .இதனால் அந்த பெண் கடந்த ஆகஸ்டு மாதம் தன் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை எடுத்து கொண்டு, வீட்டிலிருந்த புதிய சொகுசு காருடன் மாயமாகி விட்டார்.

அதன் பிறகு போலீசார் அவர்களை ஒரு மாதமாக தேடி வந்து, டெல்லியில் கன்டுபிடித்தனர் .அப்போது அவர்களை சமாதானம் செய்து வைத்து போலீசார் கூட்டி வந்தனர் அதன் பிறகு அந்த மனைவி சில மாதம் கணவரோடு வாழ்வது போல் நடித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் கள்ள காதலனோடு மீண்டும் மாயமாகி விட்டார் ,இதனால் அந்த கணவர் மிகவும் மனம் நொந்து போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து மீண்டும் அந்த காதலர்களை தேடி வருகின்றனர்

Contact Us