மொறிசன் சூப்பர் மார்கெட்டில் கியூவில் ஏன் முந்துகிறீர்கள் என்று கேட்ட மாணவன துரத்திச் சென்று சுட்ட தாதாக்கள் !

பிரித்தானியாவின் லங்கஷியரில், மொறிசன் சூப்பர் மார்கெட்டுக்கு வெளியே பலர் வரிசையில் காத்துக் கொண்டு நின்றார்கள் உள்ளே செல்ல. ஆனால் தீடீரென அங்கே வந்த நீல் மற்றும் லீ என்ற இரு சகோதரர்கள், வரிசையை முந்திக் கொண்டு உள்ளே செல்ல முற்பட்டுள்ளார்கள். இதனை அடுத்து வரிசையில் நின்ற, ஹுசைன் என்ற 19 வயது மாணவன், ஏன் முந்துகிறீர்கள் என்று கேட்க்கவே. இந்த இரண்டு தாதாக்களும் அவரோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பின்னர் அந்த மாணவனை பின் தொடர்ந்து சென்றுள்ளார்கள். இதனைக் கண்ட மாணவன்…

ஓட முற்பட்ட வேளை அவரை துரத்திச் சென்று கால் தடக்கம் போட்டு நிலத்தில் வீழ்த்தி, பின்னர் துப்பாக்கி எடுத்து மாணவனைச் சுட்டுள்ளார்கள். ஆனால் அதிஷ்டவசமாக மாணவன் உயிர் பிழைத்துக் கொண்டான். சம்பவ இடத்தில் ஒரு மறைவான பகுதியில் CCTV கமரா ஒன்று இருந்துள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து பொலிசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இதில் நீல் என்ற நபருக்கு 28 வருட சிறையும், லீ என்ற நபருக்கு 8 வருட சிறையும் விதிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us