ராஜீவ் காந்தியை கொலை செய்துவிட்டு ஈழத்தமிழர்கள் மீது பழியை போட்டுள்ளார்கள்; மாநாட்டில் அசால்ட்டாக சொன்ன சிம்பு!

 

சிம்பு நடிப்பில் வெங்கெட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மாநாடு படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

குறித்த திரைப்படத்தின் மைய கருத்து முதலமைச்சரை கொலை செய்ய அரசியல் வாதியும் அவரது நண்பருமான ஒருவர், பொலிஸ் அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து முயற்சிக்கிறார்.

இவ்வாறு முதலமைச்சரை கொலை செய்துவிட்டு முஸ்லிம் நபரொருவர் கொலை செய்ததுபோல் காட்டி, அதன் பின் இதை மதக்கலவரமாக மாற்ற திட்டம் தீட்டுகின்றனர், மொத்தத்தில் முதலமைச்சரை கொலை செய்து விட்டு முஸ்லிம் சமூகம் மீது பழிபோட முயற்சிக்கின்றனர்.

இதனை தடுக்க கதையின் நாயகன் சிம்பு போராடுகிறார், ஒரு கட்டத்தில் இப்படித்தான் தமிழகத்தில் நடந்த முக்கிய பிரமுகரின் கொலையில் ஒரு சமுதாயத்தை இழுத்து விட்டார்கள் போல என ராஜிவ் காந்தி கொலைக்கு ஈழத்தமிழர்கள் மீது பழிபோட்டத்தை நாசுக்கா சொல்லி நகர்கிறார் சிம்பு என சமூக வலைத்தளத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

Contact Us