வரலாற்றில் முதல் தடவை: லண்டன் தமிழர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்- Tamil Heritage Month தை பொங்கல்

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக ஏற்றுக் கொண்டுள்ளது பிரித்தானியா. லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாக, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு. தைப் பொங்கல் நாளை தமிழர் மரபு நாளாக அரசு கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெரு நகர அவையில் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நபர்கள் பேசுகையில், தமிழர்கள் பிரித்தானியாவுக்கு செய்துள்ள சேவைகளை பாராட்டிப் பேசியுள்ளார்கள். அஸ்ரா செனிக்கா மருந்து கண்டு பிடிப்பது முதல் கொண்டு, சகல துறைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தமிழர்களை பெருமிதப் படுத்தி உள்ளார்கள், அங்கத்தவர்கள். வீடியோ கீழே இணைப்பு

Contact Us