மின்சார சபையை ராணுவம் டேக் ஓவர் பண்ணுமா ? மின்சார தடைக்கு என்ன காரணம் என்று கேட்டால் ….

2ம் இணைப்பு: தற்போது கிடைக்கப் பெற்ற செய்திகளின் அடிப்படையில், மின்சார சபை ஊழியர்களோடு பேச கோட்டபாய ஒத்துக் கொண்டதை அடுத்து, சிலவேளை இன்னும் 3 தொடக்கம் 4 மணித்தியாலங்களில் மீண்டும் மின்சாரம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஊழியர் கோரிக்கையை கோட்டாபாய ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னைய செய்தி: இலங்கையில் நாடு முழுவதும், அதாவது முழு இலங்கையில் மின்சாரம் இல்லை. மின்சார சபையை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்ற இலங்கை அரசு முனைப்புக் காட்டி வந்தது. இதனால் மின்சார சபையில் வேலை செய்யும் பலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில். ஊழியர்களே மின்சாரத்தை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அது போக 4 டிரான்ஸ்போமர்(மின் சம நிலையாக்கிகள்) வெடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறைந்த பட்சம் 3 தினங்களாவது மின் வெட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ராணுவத்தினரை அனுப்பி மின்சார சபையை மீண்டும் இயக்க, கோட்டபாய விரும்புகிறார். ஆனால் துப்பாக்கி பிடிக்கும் ராணுவத்திற்கு மின்சார சபை வேலைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ராஜா….. இந்த டிரான்ஸ் போமர்கள் வெடிக்க…

ஊழியர்களே காரணம் என்ற மற்றொரு செய்தியும் வருகிறது. அதனை நிவர்த்தி செய்ய ஊழியர்கள் எவரும் செல்லவில்லை. அத்தோடு அவர்கள் அதில் கவனம் செலுத்தவும் இல்லையாம்.  இதனால் தற்போது இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்தியா அவசரமாக சில டிரான்ஸ் போமர்களை கொடுத்து உதவலாம். இல்லையென்றால் முக்கிய பொறியியலாளர்களை அனுப்பியும் வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலிண்டன் வெடிப்பு, மழை வெள்ளம், கொரோனா , இறக்குமதி பற்றாக் குறை, அன்னியச் செலாவணி இல்லை, பயிர் செய்கை நாசம், உர இறக்குமதியில் ஏமாத்து, தற்போது மின்சாரமும் இல்லை. இப்படி இலங்கை செல்லும் என்று எவரும் எதிர்பார்க்கவே இல்லை. கோட்டபாயவை தெரிவு செய்த சிங்கள மக்கள் இப்ப தான் மிக மிக நன்றாக உணர்ந்திருப்பார்கள், எப்படிப் பட்ட ஒரு முட்டாளை தாம் தெரிவு செய்திருக்கிறோம் என்று.

Contact Us