6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வரும் கேப்டன்.. வெளியான பரபரப்பு தகவல்

நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நமது கவனத்தை ஈர்த்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவருடைய படம் என்றாலே வித்யாசமான கதை மற்றும் புதுமை கலந்து இருக்கும் என்று பெயரெடுத்தவர்.

ஆனால் அதன் பிறகு வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியது. சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி தன்னுடைய பழைய டிராக்கிற்கு திரும்பினார்.

இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். மழையை வெறுக்கும் ஒரு மனிதனை பற்றிய கதைதான் இத் திரைப்படம். இதில் நடிகை மேகா ஆகாஷ் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதமாக நடிகர் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். சமீபகாலமாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பொது வெளியில் வருவதையும் தவிர்த்துவிட்டார்.

அவர் கடைசியாக தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு விஜயகாந்த் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மழை பிடிக்காத மனிதன் பட கூட்டணியில் அவர் விரைவில் இணைவார் என்றும், இதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் ஏற்கனவே நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜயகாந்தும் இப் படத்தில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கேப்டன் பிரபாகரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த படத்தின் மூலம் அவர்கள் இணைய உள்ளனர். இந்த செய்தி அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Contact Us