மாநாடு படத்தில் நடிப்பதற்கு எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம்.. அண்ணாந்து பார்க்கும் திரையுலகம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் மாநாடு. எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் மாநாடு படத்தில் நடித்திருந்தார்கள். மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் பெரிய சிக்கலுக்கு பிறகு நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி அமோக வெற்றி பெற்றது.

மாநாடு படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா நடிகர், இயக்குனர், கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் . இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஜயின் மெர்சல் படத்தில் டேனியல் ஆரோக்கியம் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அதேபோல் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

எஸ் ஜே சூர்யா மாநாடு படத்தில் தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா பேசிய வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு என்ற வசனம் ட்ரெண்டிங் ஆனது. மாநாடு படத்திற்காக எஸ் ஜே சூர்யா 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

இப்படத்தில் சிம்புவின் நடிப்பைவிட எஸ் ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதைதொடர்ந்து எஸ் ஜே சூர்யா ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

தற்போது எஸ் ஜே சூர்யா வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமை செய், தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான், ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வெளியாக உள்ளது.

 

Contact Us