வயசுல எல்லாரும் செய்வதுதான். அதற்கெல்லாம் என்டு கார்டு போட்டாச்சு, சீறும் சிம்பு.

மனுஷன் செம கம்பக் கொடுத்திருக்கிறார் என அனைவரும் பாராட்டுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இமாலய இயக்குனர் சங்கர் முதல் அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். தன்மேல் படிந்திருந்த அவப்பெயர்களை நீக்கி நான் அப்படி இல்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் வீட்டில் அவரது தந்தை டி ராஜேந்தர் மற்றும் தாய் உஷாராஜேந்தர் என அனைவரும் பெரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் மாநாடு படம் ஹிட்டானவுடன் நிச்சயமாக படக்குழுவினர் மது விருந்து கொடுத்திருப்பார்களே, அதில் கலந்து கொண்டீர்களா என சிம்புவிடம் கேட்டுள்ளனர்..

அதற்கு சிம்பு கொடுத்த பதில் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. , அவர் கூறியதாவது, இனி இந்த மாதிரி கேள்விக்கு என்னுடைய ஒரே பதில், இனிமேல் நான் இது மாதிரியான பார்ட்டியில் கலந்துகொள்ள மாட்டேன். பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்தியது எல்லாம் ஒரு காலம், இனி அதன் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

சிம்பு தற்போது தன்னுடைய உடல் எடையில் மிகவும் கவனத்தை செலுத்துகிறார். அசைவ சாப்பாடு மற்றும் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். அவை இரண்டும் அவருடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவாது என்று தெரிவித்துள்ளார். இனிமேல் ஒரு தரமான சிம்புவை திரையில் காணலாம் என்று சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றன.

Contact Us