3,000 ஆயிரம் பேருக்கு தொற்றிய ஒமிக்ரான் வைரஸ்: பிரிட்டன் இனி என்ன செய்யப் போகிறது ?

பிரித்தானியாவில் கடந்த 72 மணி நேரத்தில், 3,127 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்.எச்.எஸ் வழங்கிய தகவல். ஆனால் அறியப்படாத தொற்று இன்னும் பன் மடங்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரித்தானிய பிரதமர் அனைவரையும் பூஸ்டர் ஊசியை எடுக்குமாறு பணித்துள்ளார். ஆனால் இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு பாவனையில் உள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசிக்கும், ஒமிக்ரான் வைரஸ் கட்டுப் படாது. அப்படி என்றால் பூஸ்டர் போடுவதால் என்ன லாபம் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? ஆனால் பூஸ்டர் ஊசியை போட்டால், உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்கிறார்கள்.. இருப்பினும்..

என்ன நோய் எதிர்ப்பு தன்மை உடலில் இருந்தாலும், ஒமிக்ரான் தாக்கியே தீருகிறது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் ஆபத்தான வைரஸ் அல்ல என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொற்றும் விகிதம் தான் மிக மிக அதிகமாக உள்ளது. எனவே ஒமிக்ரான் வைரசின் ஸ்பெஷலே தொற்றுவது தான்.

Contact Us