லண்டனில் ஒரே நாளில் 78,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று: பிரிட்டனை பல நாடுகளில் சிவப்பு பட்டியலில் போடும் அபாயம்

2ம் இணைப்பு: சற்று முன்னர் இன்று 16.12.2021(காலை 9.15) : பிரான்ஸ் நாடு பிரித்தானிய மக்களை தடை செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது தேவை இல்லாமல் பிரான்ஸ் நாட்டுக்குள் பிரிட்டன் மக்கள் செல்ல தடை: முக்கிய தேவை என்றால் மட்டுமே செல்ல முடியும் என்றும். அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது பிரான்ஸ். இதனை தொடர்ந்து ஏனைய பல நாடுகள் பிரித்தானியாவை தடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மிக மிக மோசமாக பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 1ம் இணைப்பு கீழே…. உள்ளது.

பிரித்தானியாவில் ஒரே நாளில்15(நேற்றைய தினம்) 78,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வெளியாகியதில் இருந்து, பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள், அவசரமாக இன்று கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 78,000 ஆயிரம் பேரில் எத்தனை பேருக்கு ஒமிக்ரான் என்று சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை. இருப்பினும், 80% சத விகிதமானவர்களை ஒமிக்ரான் தாக்கியுள்ளது என்று நம்பப் படுகிறது.  இதனால் பல மாற்றங்கள் இனி இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. உலக நாடுகள் பிரித்தானியாவை,  சிவப்பு பட்டியலில் போடக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. என்றும் இல்லாத அளவு கொரோனா தொற்று பிரித்தானியாவில் தலை விரித்து ஆடுகிறது. தமிழர்களே ஜக்கிரதை !

 

Contact Us