திருமணம் ஆன சில நாட்களில் இப்படி ஒரு பிரச்சனையா ? ஆர்யன் – ஷபானா ஜோடி. என்ன பிரச்சனை ?

சமீபத்தில் நடந்து முடிந்த ஷபானாவின் திருமணத்தில் அதற்குள் பிரச்சனை வெடித்து இருக்கிறது. வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். மேலும், இந்த சீரியலில் நாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து வருகிறார்.

இதுக்கிடையில் தேனிலவுக்காக புதுச்சேரிப் பக்கமுள்ள ஒரு ரிசார்ட்டுக்கு 4 நாட்கள் சென்ற இவர்கள் அடுத்த நாளே கிளம்பி வந்துவிட்டார்களாம். இவர்கள் இருவர்குள்ளும் மனக் கசப்பு அதிமாகி கொண்டு செல்வதாக நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே ‘நீயா விலகிடு, நாங்க அவனுக்கு (ஆர்யனுக்கு) வேற ஒரு பொண்ணைப் பார்த்திருக்கோம்’ என்கிற ரீதியிலும் ஷபானாகிட்டப் பேசினதாச் சொல்றாங்க‌” என்கிறார்கள்

இதற்கெல்லாம் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாபனாவின் இந்த பதிவிற்கு என்ன காரணம் என்று குழம்பிபோய்யுள்ளனர்.

Contact Us