விஜயகாந்துடன் போட்டி போட்ட பிக் பாஸ் சஞ்சீவ்.. விஜய்க்கு முன் நான் தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இந்த படங்களுக்கெல்லாம் முன்பாக சஞ்சீவ் குழந்தை நட்சத்திரமாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 1989ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்மனச் செல்வன்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி ஹாங்காங் அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சஞ்சீவ் அவருக்கு மகனாகவும், ஷோபனாவுக்கு தம்பியாகவும் அந்த படத்தில் நடித்திருப்பார். விஜய் முதலில் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்த படம் செந்தூரபாண்டி. அதற்கு முன்னரே சஞ்சீவ் பொன்மனச்செல்வன் இல் நடித்துள்ளார்.

அதன் பிறகு ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் சஞ்சீவ், விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்திருந்தார். அந்தப் படத்தை தொடர்ந்து சஞ்சீவ் நிலாவே வா, பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் பிரபலமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மெட்டி ஒலி சீரியலில் சஞ்சீவ் நெகட்டிவ் ரோலில் நடித்து புகழ் பெற்றார்.

இந்த சீரியலின் வெற்றிக்கு பின்னர் அவர் யாரடி நீ மோகினி, கண்மணி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளார். தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய எதார்த்தமான குணத்தால் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். சினிமாவிலும் சீரியலிலும் நாம் பார்த்த சஞ்சீவ் குழந்தை நட்சத்திரமாக ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us