3 தமிழ் பொலிஸ்காரர்களை சுட்டுக் கொன்று விட்டு- சிங்கள பகுதியில் சென்று சரணடைந்த சார்ஜன்ட்:

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் நிலையத்தில் இன்று இரவு(24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 காவல்துறையினர் உயிரிழந்திருப்பதுடன் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினர் காயமடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படும் காவல்துறை சார்ஜன்ட் மொனராகலையின் காவல் நிலையம் ஒன்றில் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த காவல் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மரணித்த 3 பொலிஸ் அதிகாரிகளும் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, துப்பாக்கி சூட்டில் கல்முனை பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட, பொலிஸ் அதிகாரி அழகரட்ணம் நவீணன் என்பவர் மரணமடைந்துள்ளார். ஆனால் ஏனைய 2 பேரது விபரங்களை பெற முடியவில்லை.

Contact Us