அடக்கடவுளே…! 70 குழந்தைகளா…? “பாலியல் வன்கொடுமை” செய்த பாதிரியார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தென் மேற்கு ரஷ்யாவில் யுரல் மலைத்தொடர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் நிக்கோலாய் என்னும் பாதிரியார் ஒருவர் பணிபுரிந்துள்ளார். இவரும் இவரது மனைவியும் சேர்ந்து மொத்தமாக 70 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்கள்.

இதனால் இவருக்கு தேசிய அளவிலான விருது ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் பாதிரியார் நிக்கோலாய்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அவருக்கு கொடுக்கப்பட்ட விருதையும் நீதிமன்றம் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

Contact Us