இந்த அம்மாவை தான் கொன்றான் 22 வயது கஞ்சா அடிகாரன்: வீட்டின் சுவரில் ரத்தக் கறை…

 

பல காலமாக வங்கியில் வைப்பில் உள்ள பணத்தை, சிலவேளை இலங்கை அரசு எடுத்து விடும் என்று நினைத்த,  இராசலட்சுமி அம்மா(67). சம்பவ தினத்திற்கு முதல் நாள் தான் தனது வங்கியில் வைப்பில் இருந்த காசை எடுத்துள்ளார். இதனை நன்றாக நோட்டமிட்ட, இந்த பக்கத்து வீட்டு இளைஞர். இராசலட்சுமியை கொலை செய்து விட்டு பணத்தையும் நகையையும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருக்கிறார். லண்டனில் தனது மகனோடு வசித்த வந்த இராசலட்சுமி அம்மா, தனது காணியை பராமரிக்க என்றே, கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சென்று வாழ்ந்து வந்த நிலையில். பக்கத்து வீட்டில் வசித்து வந்த 22 வயது இளைஞர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அதிர்வு இணையம் அறிகிறது. அந்த இளைஞர்..

இராசலட்சுமி அம்மா வசித்து வந்த வீட்டிற்கு சென்று அவரைக் கொலை செய்துவிட்டு, பணத்தையும் நகையையும் திருடிச் சென்றுள்ளார். வழமையாக மாலை வேளையில், அம்மாவின் உறவினர்கள் அவர் ஓகேயாக இருக்கிறாரா என்று தொலைபேசியில் பேசுவது வழக்கம். அன்றைய தினம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தான், வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். சுவரில் ரத்தக் கறை இருந்துள்ளது. இராசலட்சுமி அம்மாவின் செல் போன் நிலத்தில் வீழ்ந்து உடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த உறவினர்கள்…

இராசலட்சுமி அம்மாவை யாரோ கடத்தி விட்டார்கள் என்று தான் முதலில் நினைத்து, பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் பின்னர் தான், அவரது சடலம் ஏரியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி உதயநகர் பகுதில் உள்ள தனது காணியை பராமரிக்கவே அவர் லண்டனில் இருந்து, ஊருக்குச் சென்றிருந்தார். சிங்கள ராணுவம் தமிழ் இளைஞர்களுக்கு பரப்பியுள்ள இந்த போதைப் பொருள் பாவனை… தமிழ் இளைஞர்களை எந்த இடத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது என்று பார்த்தீர்களா மக்களே ? அதுவும் கிளிநொச்சியில்…. 12 வடங்களுக்கு முன்னர் என்றால் இப்படியான போதைப் பொருள் என்றால் ?  என்ன என்று கேட்டிருப்பார்கள் இளைஞர்கள். ஆனால் இன்றைய நிலை இது தான்… இன்னும் இது போல பல சம்பவங்கள் போதைக்கு அடிமையான இளைஞர்களால் அரங்கேறக் கூடும்… ஜாக்கிரதை தமிழர்களே. இராசலட்சுமி அம்மாவின் ஆத்ம சாந்திக்கு நாமும் பிரார்த்திப்போம்….

Contact Us