மணமகனுக்கு வந்த மணமகளின் வீடியோ – தொழிலதிபர் தலைமறைவு

திருமணத்திற்கு முதல் நாள் மணமகனின் வாட்ஸ் அப்பிற்கு மணமகளின் வீடியோ ஒன்று வந்திருக்கிறது. அதை பார்த்து அதிர்ந்துபோன மணமகன் திருமணத்தை உடனடியாக நிறுத்தி இருக்கிறார். இதனால் மணமகள் வேலைபார்த்து வந்த நிறுவனத்தின் முதலாளி தலைமறைவாகி இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். தொழிலதிபரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் ஏசி மெஷின் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார் . கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அவரது நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.

அந்த இளம்பெண்ணுக்கு தற்போது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள். இது அனில்குமாருக்கு தெரியவர, நீ வேற யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. உன்னை நானே இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். நீ போய்விட்டால் இந்த நிர்வாகத்தை கவனிக்கவும் ஆளில்லை என்று உருத்தமாகப் பேசியிருக்கிறார். மேலும் ஆசை வார்த்தை கூறி அவரிடம் தவறாக நடந்து இருக்கிறார். அப்போது அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார்.

அதன் பின்னரும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததால் திருமணத்தை நிறுத்தச் சொல்லி இருக்கிறார் அனில்குமார். திருமணத்தை நிறுத்தவில்லை என்றால் உனது வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். ஆனால் இது குறித்து பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் இருக்கவே திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.

திருமணத்தன்று முதல்நாள் மணமகன் செல்போனுக்கு மணமகளுடன் தான் இந்த வீடியோவை அனுப்பியிருக்கிறார் அணில்குமர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர் பெண் வீட்டார். இதையடுத்து அந்த இளம்பெண் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க அது தெரிந்து அனில்குமார் தலைமறைவாகி இருக்கிறார்.

Contact Us