மோட்டுத் தனமான முடிவு: இலங்கையில் உச்சம் பெற்றது உணவு தானிய தட்டுப்பாடு இனி என்ன நடக்கவுள்ளது ?

இலங்கையில் முன் எப்பொழுதும் இல்லாதவாறு உணவுத் தானிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியிடம், டாலர் பற்றாக் குறை ஏற்பட்ட காரணத்தால், பல இறக்குமதிகளை இலங்கை அரசு அறிவித்தது. இதனால் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கிறோம் என்று கூறிய கோட்டபாய அரசு, உள்ளூர் விவசாயத்திற்கு இருந்த தானியங்களை கூட பயன்படுத்த ஆரம்பித்தது. மேலும் தரமற்ற சீன உரங்களை இறக்குமதி செய்து. அதில் பயிர் நாசம் விளைந்தது. உள்ளூர் உற்பத்திகள் உடனடி பலனை தரவில்லை. இதன் காரணத்தால் அடுத்த போகத்திற்கு மிஞ்சி இருந்த தானியங்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனை இலங்கை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. இதனால்..

தானியங்களை இனி இறக்குமதி செய்யவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்படும். மேலும் உணவுப் பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவு அதிகரித்துள்ளது. இப்படி பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது இலங்கை.

Contact Us