அந்த வழியாக கோட்டபாய செல்ல .. கூ… போட்ட மக்கள்: கடுப்பாகி கடையை முடச் சொன்னாரா ?

பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், அந்தச்செய்தி முழுமையாகப் பொய்யானது எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பிரதேச மக்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும் ? குறித்த கடையை ஏன் பொலிசார் மூட வேண்டும் என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா ?

Contact Us