புதுவருட வாழ்த்து தெரிவித்த லொஸ்லியா: பெரும் குழப்பத்தில் ரசிகர்கள்

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு கொண்டவர் தான் இலங்கை தமிழ்ப்பெண்ணான லாஸ்லியா.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பெரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் மூலம் பல படங்களில் தற்போது நடித்து வருகின்றனர்.

இலங்கை தமிழ்ப்பெண்ணான லொஸ்லியா தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் பிரண்ட்ஷீப் படத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று (2021 -10- 17) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இதேவேளை, தற்போது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் லொஸ்லியாவிற்கு ஜோடியாக மற்றுமொரு இலங்கை தமிழர் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் நடிக்கிறார்.

இவ்வாறு இருக்கையில் ரசிகர்களுக்கு புது வருட வாழ்த்து கூறிய லொஸ்லியா பற்றி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். அதாவது சிரித்த முகத்துடன் வாழ்த்து கூறாமல் சோகமான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

Contact Us