இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமா?

பொது இடங்களுக்கு செல்லும் போது, மக்கள் கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.

இதற்காக செயலி ஒன்றையும் கிவ்.ஆர் கோட் (QR Code) ஒன்றை உருவாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த செயல்முறைக்கு இரண்டு வார காலம் எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸைகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குப் பிரவேசிப்பது தொடர்பில், சட்ட கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.

Contact Us