இறுகி வரும் செக்ஸ் வழக்கு .. மகாராணி கொடுத்த HRH டைட்டிலை இழக்க உள்ள இளவரசர் அன்ரூ-

Her Royal Highness என்பார்கள், அதாவது பிரித்தானிய மகாராணி குடும்ப அங்கத்தவர்களுக்கு இந்த பட்டம் பொதுவாக செல்லுபடி ஆகும். இது ஒரு பாதுகாப்பும் கூட. குடும்ப அங்கத்தவர்களை பொலிசார் கைது செய்ய முடியாது. பிரித்தானிய அரசு கூட இதனை அனுமதிக்காது. அந்த அளவு மிகவும் பவர்புல். ஆனால் தற்போது பிரித்தானிய மகாராணியின் மகன், இளவரசர் அன்ரூ மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, இறுகி வருகிறது. வேர்ஜீனியா என்ற பெண் 17 வயது(சிறுமி) ஆக இருந்த நேரம், அன்ரூ அவரோடு உடல் உறவில் இருந்துள்ளார். அதற்கான ஆதார புகைப்படம் ஒன்றையும் வேர்ஜீனியா வெளியிட்டுள்ளார். இவர் தொடர்ந்துள்ள தனிப்பட்ட  வழக்கு மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில்… (Duke of York  ) டியூக் ஒப் யோர்க்(அதாவது யோர்க் நகரின் கோமகன்) என்ற பட்டத்தை…

இளவரசர் அன்ரூ இளக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மகாராணியார் இந்த கட்டளையைப் பிறப்பிக்க கூடும் என்றும். அப்படி மகாராணியார் கட்டளையிட்டால், ஒரே நாளில் இளவரசர் அன்ரூ சாதாரண மனிதர் ஆகிவிடுவார்.  பின்னல் அவரால் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவே முடியாது. அவருக்கான அரசு மரியாதை இருக்கும். ஆனால் கோ-மகன் என்ற தகுதி இருக்காது. இருப்பினும் HRH பட்டம் அவருக்கு இருப்பதனால், பிரித்தானியாவில் அவர் பாதுகாப்பாக இருப்பார். அவரை நாடு கடத்த வேண்டும் என்று..

அமெரிக்காவில் வேர்ஜீனியா போராடி வருகிறார். ஆனால் அமெரிக்க அரசு வாயே திறக்கவில்லை. இது போலவே பிரித்தானிய அரசும் மெளனமாகவே இருக்கிறது. இவர் உண்மையில் தவறு செய்தாரா இல்லையா என்பது கூட நீதிமன்றத்திற்கு தெரியாது. இதுவரை நிரூபனம் ஆகவும் இல்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு இவரை அனுப்பவே பிரித்தானிய அரசு விரும்பவில்லை. அதனைக் கூட தரக் குறைவாக எண்ணுகிறது பிரித்தானியா மற்றும் அரச குடும்பம். இதனால் அமெரிக்க அரசும், எதனையும் செய்யவில்லை.

 

Contact Us