பொது மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி – அரசு அனுமதி!

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இதன் பிறகு, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ் கொண்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் வரும் 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 4வது டோஸை செலுத்திக் கொள்ள அனுமதி அளித்திருக்கும் முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டில், 65 லட்சம் பேர் முதல் டோஸை செலுத்திக் கொண்டதாகவும், 42 லட்சம் பேர் இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Contact Us