யாழ் இந்துக்கல்லூரி மாணவனை காரை நகர்கடலில் தோன்றிய பாரிய அலை அள்ளிச் சென்றது!!

காரைநகர் கசூரினா கடலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த யோகராசா யோகீசன் (18) என்ற மாணவனே நீரில் மூழ்கி, காணாமல் போயுள்ளார். புத்தாண்டு விடுமுறையான இன்று பிற்பகல் கோண்டாவிலை சேர்ந்த இளைஞர் குழுவொன்று, வாடகை வாகனம் ஒன்றில் காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது இரண்டு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இளைஞர்கள் சத்தமிட்டதையடுத்து, விரைந்த செயற்பட்ட கடற்படையினர் ஒரு இளைஞனை காப்பாற்றினர். மற்றைய இளைஞனை காப்பாற்ற முடியவில்லை.

Contact Us