12 மாதங்களின் தேவை 7.3B பில்லியன் டாலர்: கையிருப்பில் வெறும் 1.6B பில்லியன்: பாங்-ரப்(bankruptcy) அடிக்கப் போகும் இலங்கை …

அடுத்த 12 மாதங்களில் இலங்கைக்கு 7.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை. இது உள்நாட்டு தேவைக்கு இல்லை. சர்வதேச கடன்களை திருப்பிக் கொடுக்க தேவையான காசு தான், 7.3B பில்லியன் டாலர்கள். ஆனால் இலங்கையிடம் தற்போது கையிருப்பில் 1.6B லாடர்கள் மட்டுமே உள்ளது. இது போக ஜனவரியில் மட்டும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை. இன் நிலையில், 5 லட்சம் பொது மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றுள்ளார்கள். இவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்ந்த மக்கள். மேலும் சொல்லப் போனால், 2 லட்சம் பேர் சடுதியாக வாழ்வாதரத்தை இழந்து தவிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே, வெளிநாட்டவர்கள் வருகையை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்கள். இதனூடாக இலங்கை 50 ஆண்டுகள் பின் நோக்கிச் சென்று விட்டது. இனி எவர் நினைத்தாலும் இலங்கையை மீள கட்டி அமைக்க, 20 வருடங்கள் பிடிக்கும். இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில்… இலங்கை அரசு…

பாங் -ரப்சி அடிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப் படும். அப்படி என்றால் உலக வங்கி இலங்கை மத்திய வங்கியை டேக் ஓவர் செய்து நடத்த ஆரம்பிக்கும். எந்த ஒரு அரசியல் தலையீடும் அதில் இருக்கவே முடியாது. இதனூடாக சர்வதேசமே இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நிலைக்கு இலங்கை சென்றுள்ளது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியது ராகபக்ஷர்களே. ஆனால் இன்றும் அவர்கள் தனி விமானம் மூலம் திருப்பதி சென்று வருகிறார்கள். ஆனால் நாட்டில் பால் மா வாங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

Contact Us