4 வயதில் கும்பல் கடத்தியது: படம் ஒன்றை வரைந்து காட்டி 33 வருடங்களின் பின் அம்மாவை கண்டு பிடித்த நபர் இவர் தான்…

லீ-ஜிங்வீ என்னும் 37 வயது நபர் சீனாவில் வாழ்ந்து வருகிறார். அவர் திருமணம் முடித்தும் விட்டார். ஆனால் அவர் 4 வயதாக இருக்கும் போது, அவரை ஒரு கும்பல் கடத்தியது. பின்னர் அவர் அம்மாவை பிரிந்து ஹெனான் என்னும் நகரில் வாழ்ந்து வந்தார். தான் கடத்தப்பட்டதை அவர் உணர்ந்து இருந்தார். இருப்பினும் 37 வயதாகும் அவருக்கு, தனது சொந்த கிராமத்தின் பெயர் என்ன என்று தெரியவில்லை. அதனால் அவரால் அம்மாவை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. சில நினைவுகள் மட்டுமே அவருக்கு மறக்காமல் இருந்தது. சமீபத்தில் இது போல கடத்தப்பட்ட சில பிள்ளைகள், மீட்க்கப்பட்டதோடு அவர்களை பெற்றோரிடம் சேர்த்ததாக பொலிசார் TVல் தெரிவிப்பதை அவர் பார்த்தார். அதில் இருந்து அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் வாழ்ந்த இடம். அதில் உள்ள சில முக்கிய பகுதிகளை மட்டும் வரைந்து, அவர் பொலிசாரிடம் கொடுத்தார். தனது வீடு அதனை சுற்றி எப்படி இருக்கும் என்று அவருக்கு நினைவு இருந்தது.

இதனை அடுத்து அப்படிப் பட்ட இடம் எங்கே இருக்கிறது என்று சீனப் பொலிசார் துப்பு துலக்க ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் சரியான கிராமத்தை கண்டு பிடித்து அங்கே சென்று குறித்த வீட்டில் உள்ள அம்மாவை சந்தித்தார்கள். உங்கள் மகன் காணமல் போனாரா என்று கேட்டார்கள். ஆம் அது நடந்து 33 வருடங்கள் ஆகிறது என்றார் அந்த அம்மா… உடனே பொலிசார் லீ ஜிங்வீ யோடு தொடர்பு கொண்டு, கிராமத்தின் பெயரைச் சொல்லி அங்கே அவரை வரவளைத்தார்கள். 4 வயதில் தொலைந்து, 33 வருடங்கள் கழித்து லீ ஜிங்வீ தனது தாயாரை பார்த்த சம்பவம் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவளைக்கும் விடையம். வீடியோ கீழே இணைப்பு.  சில நினைவுகள் போதும்…. அன்பும் … பாசமுன் என்றும் தோற்ப்பது இல்லை..

Contact Us