கெட்ட கேட்டில் ஒமிக்ரான் வேறு இலங்கையில் சிங்கள பகுதியில் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது- இனி மக்கள் பாடு ?

இலங்கை சொல்லவே முடியாத அளவு பெரும் திண்டாட்டத்தில் உள்ளது. பால் மா பக்கெட் ஒன்றை வாங்கி 100G கிராமாக பிரித்து மீண்டும் அடைத்து விற்பனை செய்யவேண்டி உள்ளது. இதனால் சிங்கள மக்களே பெரும் அவதிப்படுகிறார்கள். இன் நிலையில் சிங்களப் பகுதிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. வட கிழக்கில் ஒமிக்ரான் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது. ஆனால் தென் இலங்கையில் ஒமிக்ரான் பரவல், அதிகமாகியுள்ள நிலையில். கட்டுக்கு அடங்காமல் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் இனி வாழ முடியாது என்று பல இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முனைந்து வருகிறார்கள்… இது போக…

கொரோனா அச்சுறுத்தலையாவது அரசு கட்டுப் படுத்த தவறி விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உணவு விலை எகிறியது, கேஸ் இல்லை, மின்சாரம் பற்றாக் குறை, கொரோனா, வாழ்வாதாரம் இல்லை. இப்படி சூடான் நாட்டை விடவும் அதள பாதாளம் நோக்கிச் செல்கிறது இலங்கை.

Contact Us