இங்கிலாந்து செல்லும் பயணிகளுக்கு குஷி தான்…. இனிமேல் இது தேவையில்லை….!!

 

இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல விதிமுறைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், பிரிட்டன் அமைச்சர்கள் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பு மேற்கொள்ளவேண்டிய கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் இந்த வாரம் மறுஆய்வு செய்ய உள்ளார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பாக மேற்கொள்ளவேண்டிய கொரோனா பரிசோதனை குறித்த விதிமுறை விரைவில் விலக்கிக்கொள்ளப்படவுள்ளது என்று ஒரு அதிகாரி கூறியிருக்கிறார்.

அந்த அதிகாரி கூறியுள்ளதாவது, ஒமிக்ரான் தொற்றின் பரவும் வேகத்தை குறைப்பதற்காகவும் பிரிட்டன் நாட்டிற்குள் அந்த வைரஸ் நுழையாமல் தடுப்பதற்காகவும் பயணத்திற்கு முன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று விதி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது. எனவே அந்த பரிசோதனைகள் தேவை இல்லை என்று கூறியிருக்கிறார்.

Contact Us