ஒரு கோடி சூரியனின் சக்தியை கக்கி அனைத்தையும் அழிக்கும் நட்சத்திரம் கண்டு பிடிப்பு… பூமி எந்த அளவு பாதுகாப்பில் உள்ளது ?

நாம் வாழும் பூமியில் இருந்து, பல மில்லியன் மைல்களுக்கு அப்பால், ஒரு நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். குறித்த நட்சத்திரம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சக்த்தி வாய்ந்ததாக உள்ளது. சுமார் 1 கோடி சூரியன் ஒன்றாக, இருந்தால் எப்படியான சக்த்தி வெளிப்படுமோ. அந்த அளவு சக்தியை அது செக்கனுக்கு செக்கன் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. குறித்த நட்சத்திரத்தில் நடக்கும், தொடர் ஹட்ரஜன் தாக்கம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது. அது வெளிப்படுத்தும் சக்தியானது தொலை நோக்கியில் பார்க்கும் போதே மிகவும் பயங்கரமாக இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது எமக்கு கிட்ட இருக்கத் தேவை இல்லை. எமது பால் வெளிக் கூட்டத்தில் இருந்திருந்தாலே பூமி பஸ்பமாக மாறி இருக்கும். ஆனால்..

நல்ல வேளையாக நாம் 13 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறோம். ஒரு ஒளியாண்டு என்பது, 5,298,048,000,000KM ஆகும். எனவே இதனை 13 மில்லியனால் பெருக்கினால், எவ்வளவு தூரம் வருமோ. அந்த அளவு தூரத்தில் தான் இந்த அதி பயங்கர நட்சத்திரம் உள்ளது. எனவே அந்த நட்சத்திரத்தால் பூமிக்கு ஆபத்து வருவது என்பது சாத்தியமே இல்லை. இருப்பினும் அந்த அளவு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை பூமியில் இருந்து பார்க்க கூடிய வசதிகள் இருக்கிறது என்பது தான் மிக மிக அதிசயமான விடையம்.

Contact Us