Omicron: மனிதர்களை காக்க இயற்கையே அனுப்பிய வேக்சினா இது? டாப் நிபுணர்கள் உடைக்கும் பின்னணி!

ஓமிக்ரான் காரணமாக உலகம் முழுக்க கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரானை இயற்கையான வேக்சின் என்று பல நாடுகளில் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இயற்கையே அனுப்பிய வேக்சின் இது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஓமிக்ரான் ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. அறிகுறிகள் குறைவாக உள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கிறது. இதனால் ஓமிக்ரானை இயற்கையான வேக்சின் என்று கூறும் போக்கு அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உலகம் முழுக்க பலருக்கு இது கொரோனா எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு சக்திக்கான ஆண்டிபாடியும் கிடைக்கும். அதே சமயம் இது ஆபத்தும் குறைவாக இருக்கிறது. டெல்டா பரவலை தடுத்து ஓமிக்ரான் புதிய உச்சம் தொட்டுள்ளது.

எனவே டெல்டா என்ற மோசமான வகை கொரோனாவை வீழ்த்தி மக்களுக்கு எதிர்ப்பு சக்தி வழங்க வந்த “வீக்” கொரோனாவாக ஓமிக்ரான் வகை கொரோனா பார்க்கப்படுகிறது. இந்த கருத்து உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த டாப் வல்லுனர்கள் இதை தவறு என்று கூறி உள்ளனர். இப்படி நினைப்பது மிக தவறான கருத்து என்று தெரிவித்துள்ளனர்.

Contact Us