காகம் இவ்வளவு ஸ்மார்டா…: மக்களை வியப்பில் ஆழ்த்திய வைரல் வீடியோ!

காகம் மிகவும் புத்திசாலியானது என்பதை பல்வேறு கால கட்டங்களில் பல ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறியுள்ளது. நாம் கூட, தாகமான காகம், எப்படி தண்ணீர் நிரப்பிய குடத்தில், குச்சிகளை போட்டு நிரப்பி, கீழே இருந்த நீர்ம் மட்டத்தை மேல்;ஏ கொண்டு வந்து தாகத்தை தீர்த்துக் கொண்ட கதையை படித்திருப்போம். அவை கதையல்ல நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான கேம்கள் பல உள்ளன. அதனால் அவர்களின் IQ அளவு மேலும் அதிகரிக்கும். அந்த வகையிலான கேம் ஒன்றை அனாயசமாக விளையாடும் காகத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆம், காகத்தின் புத்திசாலித்தனம் உங்கள் பெரும் ஆச்சர்யத்த கொடுக்கும். இந்த காகம் எப்படி இவ்வளவு புத்திசாலி என்பதை. கேமை அது திறன்பட விளையாடுவதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Contact Us