“சிரியாவை உலுக்கிய வெடிகுண்டு மழை!”….. கடும் பாதிப்படைந்த நகரம்….!!

ரஷ்ய நாட்டின் சுகோய் விமானங்கள், சிரிய நாட்டிலிருக்கும் இட்லிப் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது. இதில் அந்நகரில் இருக்கும் முக்கிய நீர் நிலையம் சேதமானதாக கண்காணிப்பு மையம் கூறியிருக்கின்றது. இந்நிலையில் இப்போது வரை ரஷ்யா மற்றும் சிரிய நாடுகள் இது தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடவில்லை.

ஆனால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் தலைமறைவாகி இருக்கும் இடங்களை நோக்கி தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்ய நாட்டின் வான்வெளி தாக்குதல் நிலையம் கடுமையாக சேதமடைந்து இருக்கிறது. இந்த தாக்குதல்களால் மில்லியன் கணக்கில் இடம்பெயர்ந்த சிரிய மக்களின் மனிதாபிமான நிலை மேலும் மோசமாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. சிரிய நாட்டின் உள்கட்டமைப்பை தொடர்ந்து அழித்து வருவது, மக்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Contact Us