அடக்கடவுளே…! பல வாரமா…. இளம் பெண்ணை வச்சி செய்த கோடீஸ்வரர்…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்…!!

அமெரிக்காவின் marcino என்ற 40 வயது கோடீஸ்வரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று பல வாரங்களாக தனது வீட்டில் சிறை பிடித்து வைத்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி அந்த கோடீஸ்வரர் தன்னை காதலிக்க வேண்டும் அல்லது மரணமாக வேண்டும் என்று கூறி அவர் கடத்தி சென்ற இளம்பெண்ணை கத்தியை கொண்டு மிகவும் பயங்கரமாக தாக்கி கொடுமை செய்துள்ளார்.

அதன்பின்பு அந்த இளம்பெண் எப்படியோ தன்னுடைய தோழிக்கு இது குறித்த தகவலை கொடுத்துள்ளார். அந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தோழி இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் இளம்பெண்ணை கடத்தி சித்திரவதை செய்த கோடீஸ்வரரை கைது செய்துள்ளார்கள்.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணை மீட்ட காவல்துறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

Contact Us