இலங்கைக்கு அடித்தது பேரதிஷ்டம்! 2000 கோடி ரூபாவிற்கு விற்பனையாகத் தயாராகும் “ஆசியாவின் ராணி”

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லினை கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை பெறுமதியில் 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த நீல நிற இரத்தினக்கல்லை பலாங்கொடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலக சந்தையில் பலதரப்பட்ட நாடுகள் கொள்வனவு செய்வதற்கு விரும்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us