ஆபாச ஆட்டம் முடிந்தது… காதலன் சிக்காவுடன் சிறைக்கு செல்லும் சூர்யா..!

தனது செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக பெண் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கா ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பெண் (யூடியூபர்) அவரது கணவருடன் யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசிய காணொலியை அவர்களது யூடியூபில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு ரவுடி பேபி என்றழைக்கப்படும் சூர்யா, அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக தம்பதிகளும், சூர்யாவின் யூடியூப் லைவ்வில் பதிலளிக்க, அங்கும் சூர்யா, மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும், தம்பதிகளின் செல்போன் எண்களை தனது எண் என தனது யூடியூப் வலைதளத்தில் சூர்யா பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலரும் தம்பதிகளை அழைத்து, சூர்யா என நினைத்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது காதலர் சிக்கா ஆகிய இருவரையும் இன்று காலை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர். தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா மீது (294b, 354D, 354A 109, 509, 66D, 67 ITact 2000) பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களது யூடியூப் சேனலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் கொரோனா பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் ஆன்லைன் முறையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சூர்யாவை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டும், ஆன்லைனில் ஆபாசமாக பேசுவதாக சூர்யா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதற்கு முன்னரும் திருச்சியில் விபச்சார வழக்கில் சூர்யா கைதாகினார். இதனிடையிலும், பாலியல் தொழிலுக்கு வேறொரு பெண்ணை இழுக்கும் விதமாக அவர் பேசியதான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Contact Us