“அம்மாடியோவ்!”…. ஒரே நாளில் கோடீஸ்வரர்?…. தமிழருக்கு வெளிநாட்டில் அடித்த ஜாக்பாட்….!!!!

தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தினகர் என்ற இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கடனை அடைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடிச் சென்றுள்ளார். பின்னர் கட்டிட தொழிலாளியாக Fujairah என்ற நகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி தினகர் லாட்டரி டிக்கெட் ஒன்றை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். அதன் பிறகு புத்தாண்டையடுத்து நடந்த லாட்டரி குலுக்கலில் தினகர் வாங்கிய (1,33,40,45,46) நம்பருக்கு பரிசு விழுந்திருந்தது.

அதன் மூலம் தினகருக்கு 10 மில்லியன் திர்ஹாம் ( இந்திய மதிப்பில் 20,30,21,235 கோடி ரூபாய் ) பரிசு தொகை கிடைத்துள்ளது. இதுகுறித்து தினகர் கூறுகையில், “என் நண்பர்கள் வாங்கியதால் தான் நானும் லாட்டரி வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய தாத்தா மற்றும் பாட்டியின் ஆசிர்வாதம் தான் எனக்கு இந்த பரிசு தொகை கிடைக்க காரணம்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த பரிசு தொகையை கொண்டு என்னால் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும். அதுபோக எங்கள் கிராமத்தில் விவசாய நிலம் வாங்குவதற்கும் இந்த பரிசு தொகையை பயன்படுத்துவேன். அதேபோல் எங்கள் கிராம பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இந்த பரிசு தொகையிலிருந்து உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.

Contact Us