சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டதா?

இலங்கை மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி கணக்குகளில் காணப்படும் டொலர் பெறுமதிகள் இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்றது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவிற்கு அமைய வணிக வங்கிகள் இவ்வாறு தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் காணப்படும் அந்நிய செலாவணி பெறுமதிகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில நாசகார சக்திகள் இவ்வாறு போலித் தகவல்களை பரப்பி வருவதாகவும் இந்த வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Contact Us