“நமக்கு சோறு தான் முக்கியம், அணு ஆயுதம் இல்லை!”….. ஆனா இப்ப மீண்டும் அணு ஆயுத பரிசோதனை….!!

வடகொரியா அடிக்கடி ஏவுகணைகள் சோதனையை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும். குறிப்பாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளும். இதனிடையே புத்தாண்டன்று, நாட்டு மக்களிடம் அதிபர் கிம் ஜாங் உன் பேசியதாவது, “தற்போதைய பொருளாதார நிலையில், பொதுமக்களுக்கு சாப்பாடு தான் முக்கியம். அணு ஆயுதங்கள் கிடையாது” என்று தெரிவித்தார்.

எனவே, இந்த வருடத்திலிருந்து வடகொரியா ஏவுகணை சோதனையை குறைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தொலைதூரத்தில் இருக்கும் இலக்கையும் துல்லியமாக அழிக்கக்கூடிய ஏவுகணையை இன்று அந்நாடு சோதனை செய்திருக்கிறது என்று ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் தெரிவித்துள்ளன.

வடகொரிய நாட்டின், கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று ஜப்பான் நாட்டின் கடற்படை கூறியிருக்கிறது.

Contact Us