ஆசியாவின் ராணி அப்பட்டமான பொய்யா ?: இலங்கை அரசு கட்டவிழ்த்த சித்து விளையாட்டில் இதுவும் ஒன்று ?

ஆசியாவின் ராணி என்று பெயர் சுட்டப்பட்டுள்ள ரத்தினக்கல். இது 2000 கோடி விலை போகும் என்று இலங்கை அரசு தான் செய்திகளை கசிய விட்டு வருகிறது. குறித்த கல்லை இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு ஆராட்சியாளர்கள் பரிசோதனை செய்து பார்க்கவும் இல்லை. அதற்கான அனுமதியை இலங்கை அரசு இதுவரைக்கும் வழங்கவும் இல்லை,  என்பதே உண்மை நிலை ஆகும். கடந்த 4ம் திகதி, அதனை பரிசோதனை செய்து பார்க்க எனக் கேட்ட, சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிதி நிலை அதள பாதாளம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. மக்கள் விரக்த்தியின் விழிம்பில் உள்ளார்கள். இவர்களை சாமாளிக்கவும், அரசு நல்ல பெயரை எடுக்கவுமே, கண்டு பிடிக்கப்பட்ட கல் பெரும் விலை மதிப்பு மிக்கது என்ற கதையை இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. தற்போது பார்த்தால் இலங்கையில் உள்ள பல சிங்கள மக்கள், இந்த கல்லை விற்றால் இலங்கையின் கடன் தீரும், என்று நம்புகிறார்கள். ஆனால் தமிழர்கள் இந்த பூச்சாண்டியை நம்ப…

தயாராக இல்லை. ஏன் என்றால் இலங்கை செய்யும் சித்து விளையாட்டுகள் பற்றி தமிழர்கள் முன்னரே அறிந்து வைத்திருக்கிறார்கள். கண்டு பிடிக்கப்பட்ட ரத்தினக் கல், எந்த வகையை சார்ந்தது என்பது எவருக்கும் தெளிவாக தெரியாது. சர்வதேச ஆராட்சியாளர்கள், சுரண்டி பரிசோதனை செய்து ஒரு தொகையை அறிவித்தால் அது ஏற்புடையது. ஆனால் எதனையும் செய்யாமல், அதற்கு தாமே ஒரு விலையை நிர்ணயித்து. 2000 கோடி பெறுமதியானது என்று இலங்கை அரசு கூறுவது பெரும் வேடிக்கையான விடையம் . தற்போது இந்தக் கல்லை துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தான் பல கம்பெனிகளை நமால் ராஜபக்ஷ பினாமிகள் பெயரில் வைத்திருக்கிறார். சிலவேளை..

இந்தக் கல்லில் மதிப்பு 3,000 கோடியாக கூட இருக்கலாம் என்றும் வைத்துக் கொண்டால். பினாமி பெயரில் வாங்கி விட்டு. பின்னர் அதனை மேலதிக விலைக்கும் விற்க்க முடியும் அல்லவா ? கல்லை முறையான ஏலத்திற்கு விட்டார்களா ? இல்லையே … ஏன் ?  என்ன நடந்தாலும் யாரால் தட்டிக் கேட்க்க முடியாது. அப்படி கேட்டால் என்ன நடக்கும் என்பது.. யாவரும் அறிந்த உண்மை. இந்த ஆசியாவின் ராணி என்று தாமே பட்டப் பெயர்,  ஒன்றைக் கொடுத்து விட்டு. அதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் பூச்சாண்டி காட்டி வருகிறது இலங்கை அரசு.  உண்மையில் இப்படியான கற்கள் கண்டு பிடிக்கப்பட்டால். அதனை சர்வதேச ஏல நிறுவனத்திடம் கொடுத்து. ஏலத்தில் போட்டுத் தான் விற்பார்கள். அப்படி என்றால் தான் அதி கூடிய பணம் கிடைக்கும். அனைவருக்கு அது எப்படி எந்த விலைக்கு விற்க்கப்பட்டது என்பதும் தெரிய வரும். ஆனால் இங்கு நடப்பதோ…

Contact Us