சும்மா இருந்த பெண்ணை சூ- லேசால் கொல்ல முனைந்த நபர்- Random படுகொலை திட்டம்: VIDEO

பஸ் நிலையத்தில் பஸ் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த, 26 வயதுப் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் சூ- லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அவர் சற்றும் எதிர்பார்கவில்லை. மேலும் சொல்லப் போனால் குறித்த பெண்ணுக்கும், கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட நபருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அரன் குவீனன் என்னும் 27 நபரே இவ்வாறு, யாரோ ஒருவரை ராண்டமாக தெரிவு செய்து. அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் நல்லவேளையாக அப் பெண் ஒரு நபரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இப்படி தனக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரை கொலை செய்ய முனைவது என்பது ஒரு விதமான … (வீடியோ கீழே இணைப்பு: இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்.)

சைக்கோ தனம் தான். இவர்களே பெரும் பாலும் சீரியல் கில்லராக இருப்பவர்கள். ஏன் கொலை செய்கிறார்கள். எதற்கு செய்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. இதனை பொலிசாரால் கண்டு பிடிக்கவும் முடியாது. காரணம் ஒன்றும் தொடர்பு இருக்காது. அமெரிக்காவில் உள்ள மயாமி ஏர் போட்டுக்கு அருகே உள்ள பஸ் நிலையத்தில் கடந்த 2ம் திகதி மதியம் 11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிசார் இன் நபரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதோடு. அவர் தொடர்பாக கடுமையாக விசாரணை செய்து வருகிறார்கள். ஏன் எனில் அவர் முன்னர் நடந்த கொலைகளிலும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் அல்லவா.

Contact Us