“அம்மாடியோவ்!”…. இந்த நாய் மட்டும் இல்லனா…. அவரோட நிலைமை?…. பிரபல நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

குரோவேஷியா நாட்டில் மலை ஏற்றத்திற்கு சென்ற நண்பர்கள் சிலரில் Grga Brkic என்ற நபர் மட்டும் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளார். பின்னர் ஒரு இடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் தனது நண்பரை காணவில்லை என்று மீட்பு குழுவினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் 30 பேர், Grga Brkic-ஐ தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,800 மீட்டர் உயரத்தில் உள்ள மலை பகுதியில் அவரை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு கடும் குளிர் நிலவி வந்ததால் அவருடைய உயிருக்கே ஆபத்து என்ற சூழல் உருவானது. ஆனால் அந்த சமயம் அவருடைய செல்ல நாய் அவர் உடல் மீது சுருண்டு படுத்திருந்ததால் உஷ்ணம் ஏற்பட்டு Grga Brkic உயிர் பிழைத்துள்ளார் என்று மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Contact Us