பிரிட்டனின் பறவைக் காச்சல்- கோழிகள் வாத்துகளை கொன்று குவிக்க வேண்டிய நிலை- எங்கே போகிறது பிரித்தானியா ?

பிரித்தானியாவின் பல இடங்களில் பறவைக் காச்சல் தோற்றியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானியாவின் தென் கிழக்குப் பகுதி மற்றும் வட கிழக்கு பகுதிகளில் பறவைகளுக்கு அவீனா இன்புளூவன்சா என்ற வைரஸ் தொற்றியுள்ளது. பொதுவாக பறவைகளுக்கு வரும் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு தொற்றுவது இல்லை. ஆனால் இம் முறை பிரித்தானியாவில் ஒருவருக்கு குறித்த காய்ச்சல் தொற்றியுள்ளது. இதனை அடுத்தே பறவைக் காய்ச்சல் தொடர்பாக சுகாதார சேவைப் பிரிவினர் விழிப்படைந்துள்ளார்கள். இதனால் பல ஆயிரம் பறவைகள் மற்றும் கோழி வாத்துகள் என்பன இறக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதேவேளை இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு தொற்றும் வேளை அவர் கொரோனாவால்…

பாதிப்படைந்து இருந்தால், திரிவுபட்ட புது கொரோனா வைரஸ் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி நிற்கிறது பிரித்தானிய சுகாதார சேவை. 2022ம் ஆண்டு ஆரம்பித்து சில நாட்களில் இப்படி ஒரு சோதனையா ? என்று மக்கள் வியக்கும் அளவுக்கு பிரச்சனைகள் தலைதூக்கி வருகிறது. Source : NHS : Now Britain gets hit by BIRD FLU: Health chiefs detect strain in person in South West England:

Contact Us