தீவிரவாதிகளை ராணுவத்துடன் இணைக்கும் தலிபான்கள்….. ஆப்கானில் தொடரும் அட்டூழியம்…..!!

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், 16ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். தலிபான்களின் இந்த செயலை உலக நாடுகள் பல எதிர்த்தாலும் பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளித்தன.தலிபான்களின் ஆட்சியிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு படையெடுத்தனர். அந்த நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனால், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நடத்தப்படும் என தலிபான்கள் அறிவித்தனர்.

ஆனால் தலிபான்கள் சொன்ன வாக்கை காப்பாற்றாமல், பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் ஒன்றாக அமர்ந்து படிக்க கூடாது போன்ற பிற்போக்குத்தனமான அறிவிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தலிபான்கள் செயல்படுத்தினர் இதற்கு அந்நாட்டு மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான உத்தரவைத் தலிபான்கள் பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்கொள்ளத் தற்கொலைப் படை வீரர்களைத் தலிபான்கள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

இப்போது நாடு முழுவதும் உள்ள தற்கொலைப் படை வீரர்களை ஒன்று திரட்டும் பணியை ஆப்கன் ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட விரும்புவதாக தலிபானின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறியுள்ளார்.இந்த வீரர்களை ராணுவத்தில் இணைப்பதாகவும் இவர்களுக்கு ராணுவ அதிகார பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Contact Us