லண்டனில் ஓடும் தமிழ் பதாதை பஸ்: தமிழர்களின் பாரம்பரிய மாதத்தை காட்டுவது பெருமையான விடையம் தான் !

சமீபத்தில் லண்டனில், தமிழர்களது பாரம்பரிய மாதம் தை மாதம் என்பதனையும். தைப் பொங்கல் தமிழர்களின் திரு நாள் என்பதனையும் மாநகர சபை ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து அதனை நினைவு கூரும் விதமாக லண்டனில் உள்ள பல பஸ்களில், தமிழர் பாரம்பரிய மாதம் என்ற பதாதை பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்ற வாசகம் தமிழில் எழுதப்பட்டும் உள்ளது. இது லண்டனில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அல்ல… உலகத் தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் ஒரு விடையம். பிரித்தானிய தமிழ் அமைப்பான, கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழ் அமைப்பே இதனை ஏற்பாடு செய்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

Contact Us