இந்தியா என நினைத்து லண்டனில் பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்த இந்தியருக்கு 18 மாத சிறை- டீ-போட்டேஷனும்…

இந்தியாவில் நடு வீதியில் கூட பெண்களை, கற்பழித்த நிகழ்வுகளை நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம். கூட்டு பாலியல் வன்புணர்வு என்று பல கொடுமைகள் நடக்கிறது. அங்கே வசிக்கும் சில ஆண்கள் இதனை ஒரு பொருட்டாக எடுப்பதே இல்லை. இன் நிலையில் களவாக பிரித்தானியா வந்து தங்கியிருந்த குக்கூ என்ற இளைஞர், போன் மவுத் கடல்கரைக்கு சென்றுள்ளார். அங்கே பல பெண்கள், அரை குறை ஆடைகளோடு இருந்துள்ளார்கள். இதனைப் பார்த்த பரவசத்தில், 23 வயது மற்றும் 21 வயது உள்ள இரண்டு பெண்களை, குக்கூ தொட்டுள்ளார். சில சில்மிஷங்களும் செய்துள்ளார். இடுப்பில் கிள்ளியும் உள்ளார். இதனை அடுத்து அப் பெண்கள் பொலிசாருக்கு அறிவிக்கவே. அங்கே வந்த பொலிசார் குக்கூவை அலேக்காக தூக்கிச் சென்றுவிட்டார்கள். பின்னர் தான் அவர் …

சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவில் தங்கியுள்ள விடையம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு. தண்டனைக் காலம் முடிந்த பின்னர் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவும் உள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us