Omicron நெருக்கடிக்கு உதவ லன்டனில் உள்ள NHS க்கு இராணுவம் வீரர்கள் தயார் நிலையில்

கொவிட் -19, அதிகரிப்பு காரணமாக லன்டன் தலைநகர் முழுவதும் உள்ள மருத்துவ மனைகளுக்கு சுமார் 200 படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

Omicron பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் வைத்தியசாலையில் பணியாளர் பற்றாக்குறைக்கு மத்தியில், NHS க்கு ஆதரவாக லண்டனில் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். NHS ஊழியர்களின் உடல் நிலை மோசமாக  காணப்படுவதனால் அவர்களை சுய தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளதாலும், இவர்கள் வேலை செய்ய முடியாமல் ஏற்படும் இடைவெளிக்கு இந்த படை வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் MOD தெருவிக்கின்றது.

மேலும் 200 இராணுவ படைவீரர்களில், 40 இராணுவ மருத்துவர்களும், 160 இராணுவ பொது பணியாளர்களும் உள்ளனர், இவர்கள் 40 குழுக்களாக பணியமர்த்தப்படவுள்ளதுடன், ஒரு மருத்துவர், 4 பணியாளர்களைக்கொண்டதாக இக்குழு காணப்படுகின்றன. அவர்கள் மூன்று வாரம் வரை பணியில் தொடர்ந்து காணப்படுவார்கள் என MoD அறிவித்துள்ளது

Contact Us