உச்ச நீதிமன்றத்தின் முதல் “பெண் நீதிபதி”…. பல மிரட்டல்களுக்கிடையே நடந்த வரலாற்று சாதனை…!!

லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் சீனியாரிட்டி அடிப்படையில் 4 ஆவது இடத்தில் உள்ளார். இவரை நீதிபதி குல்சார் அஹமது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க 2 முறை முடிவு செய்துள்ளார். இவருடைய இந்த முடிவிற்கு பார் கவுன்சில் மிரட்டல் விடுத்துள்ளது.

அதாவது ஆயிஷா மாலிக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தால் பாகிஸ்தானிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

இதற்கிடையே அண்மையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தில் ஆயிஷா மாலிக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க நடந்த வாக்கெடுப்பில் 4 ஆதரவும், அதற்கு சமமான எதிர்ப்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நீதித்துறை ஆணையத்தில் ஆயிஷா மாலிக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க வாக்கெடுப்பு நடந்துள்ளது.

அந்த வாக்கெடுப்பில் ஆயிஷாவிற்கு 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதனடிப்படையில் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி என்ற பொறுப்பை ஆயிஷா மாலிக் வகிக்கவுள்ளார்.

Contact Us