வவுனியாவில் திவ்வியா தானே உயிரை ஏன் மாய்த்துக் கொண்டார் என்று தெரியுமா ? புகைப்படங்கள்..

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் நேற்று(07) காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்த போது குறித்த இளம் யுவதி வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தமது மகளை பெற்றோர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இவர் வேலை பார்க்கும் ஆடைத் தொழ்ற்சாலையில் ஏற்பட்ட ஒரு சம்பவமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை என்றும். தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலதிக விபரங்கள் இந்த தற்கொலைக்கு பின்னால் உள்ளது. அது விரைவில் உங்கள் அதிர்வு இணையத்தில் வெளியாகும். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

Contact Us