கொப்பர் ஷவ்வின் மனைவியை பர்ஃவியூம் காட்டி மயக்கிய CIA யின் பணிப் பெண்: ரஷ்யாவை உடைத்த அமெரிக்கா !

1985 முதல் 1991ம் ஆண்டு வரை சோவியத் யூனியன் அதிபராக இருந்தவர் தான் கொப்பர் ஷவ். அவர் தான் இறுதியில் ரஷ்யா துண்டு துண்டாக உடைய காரணமாகவும் அமைந்தார். இதனை தான் அமெரிக்கா மிக..மிக லாவகமாக அரங்கேற்றி இருந்தது. அமெரிக்க சி.ஐ.ஏயின், மிகப் பெரிய சக்ஸஸ் இது என்று சொல்ல முடியும். அது போக அமெரிக்க புத்திஜீவிகள் வகுத்துக் கொடுத்த திட்டத்தை, சி.ஐ.ஏ அப்படியே நிறைவேற்றியதுஎன்றும் கூட சொல்லாம். இந்த பரம ரகசியமான விடையம், சில வருடங்களுக்கு முன்னர் தான், இளைப்பாறிய அதிகாரி ஒருவரால் வெளியிடப்பட்டது. அதாவது  சோவியத் யூனியன்(ரஷ்யா) அதிபராக இருந்த கொப்பர் ஷவ், ஒரு முறை அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு தனது மனைவியோடு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவர் வெள்ளை மாளிகையில், சில மணி நேரம் தனி அறையிலும் பின்னர் 7 நட்சத்திர ஹொட்டல் ஒன்றிலும் தங்க ஏற்பாடாகி இருந்தது.  ::::::The CIA Vindicated: The Soviet Collapse Was Predicted:::::

வெள்ளை மாளிகையில், கொப்பர் ஷவ்வின் மனைவிக்கு பணியாளாக ஒரு பெண் நியமிக்கப்பட்டார்,  அவர் மிகவும் திறமையானவர். அத்தோடு அவர் ஒரு சி.ஐ.ஏ ஏஜன்ட்.  இந்த விடையம் வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கே தெரியாது. அவர் முதலில் சில மணி நேரம் மட்டுமே, வெள்ளை மாளிகையில், கொப்பர் ஷவ்வின் மனைவியோடு நெருங்கிப் பழகினார். அதில் இருந்து அவர் கண்டு பிடித்த விடையம். அதிபர் கொப்பர் ஷவ்வின் மனைவிக்கு பிடித்த விடையம் வாசனைத் திரவியங்கள் தான். அதாவது பர்ஃவியூம்ஸ்(Perfume) . இதனைப் உடனே புரிந்துகொண்ட அப் பணிப் பெண். அவருக்கு தேவையான புது வகையான வாசனைத் திரவியங்களை கொடுத்ததோடு. தனது அக்கா, நீங்கள் தங்கவுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்பதாகவும். அவர் Part Timeமாக வாசனைத் திரவிய கடையில் வேலை பார்பதாகவும் கூறியுள்ளார். பின்னர்…

அதிபர் கொப்பர் ஷவ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஹோட்டல் சென்றதும். குறித்த இந்த சி.ஐ.ஏ பெண் சில உரு மாற்றங்களைச் செய்து கொண்டு அக்கா போல அந்த ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அதுவும் சி.ஐ.ஏயின் ஏற்பாடு தான். அவரை அங்கே,  கண்ட உடனே, அடையாளம் கண்டு பிடித்து விட்டார் கொப்பர் ஷவ்வின் மனைவி. உடனே இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டார்கள். இதனை அடுத்து பணிப் பெண்ணோடு தனிக் காரில், FBI ஐயின் பாதுகாப்போடு கொப்பர் ஷவ்வின் மனைவி, ஒரு வாசனை திரவியக் கடைக்குச் செல்கிறார். அங்கே தான் அந்தப் பெண்,   வேலை பார்பதாக கூறுகிறார்.

முதலில் அங்கே நின்ற மனேஜர்,  நீ ஏன் வேலைக்கு லேட்டாக வந்தாய் என்று அந்தப் பணிப் பெண்ணை பார்த்து கத்துகிறார், திட்டுகிறார். இதனைக் கவனித்த கொப்பர் ஷவ்வின் மனைவிக்கு இருந்த சில சந்தேகங்களும் விலகியது. பின்னர் அந்தக் கடையின் மனேஜர் ஓடி வந்து, அதிபரின் மனைவிக்கு ஹலோ சொல்லி வரவேற்று, புதியவகை திரவியங்களை காட்டுகிறார். அவரும் பல பொருட்களை ஆசைப்பட்டு வாங்கி, இறுதியில் அதற்கான பணத்தை செலுத்த முற்பட்டவேளை. மனேஜர் பணத்தைப் பெற மறுக்கிறார். இலவசமாக வாசனைத் திரவியங்களை பெற்ற கொப்பர் ஷவ்வின் மனைவி, மீண்டும் பணிப்பெண்ணோடு சேர்ந்து,  தாம் தாங்கியுள்ள ஹோட்டல் நோக்கிச் செல்கிறார்கள். அந்தவேளையில் தான், பணிப் பெண் கூறுகிறார். நீங்கள் மொஸ்கோ சென்றாலும் நான் உங்களை தொடர்பு கொண்டு, நீங்கள் கேட்க்கும் வாசனைத் திரவியங்களை வாங்கி அனுப்புகிறேன் என்று.

அதற்கு சம்மதித்த கொப்பர் ஷவ்வின் மனைவி. அதி சீக்கிரட் ஆன தனது தொலைபேசி இலக்கத்தை கொடுக்கிறார்.  ரஷ்யாவில் இது போன்ற வாசனைத் திரவியங்களை பெற முடியாது என்று மனைவி கூறி வேதனைப் பட்டார். இதற்கு எதிர்வு கூறிய பணிப் பெண். அப்படி என்றால் ரஷ்யாவும் செல்வச் செழிப்பான நாடாக மாறவேண்டும். அப்படி என்றால் ஜன நாயக நாடாக அமெரிக்கா போல மாற வேண்டும் என்று சில எண்ண விதைகளை விதைக்கிறார்…இப்படியாக அமெரிகாவில் தங்கி இருந்த நாட்களில் கொப்பர் ஷவ்வின் மனைவியின் மண்டையை, கழுவு கழுவு என்று கழுவியது சி.ஐ.ஏ. இதனால்…

சொந்தக் கணவனின் , கொள்கைகளுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தார் கொப்பர் ஷவ்வின் மனைவி. மாஸ்கோ சொன்ற பின்னரும், பணிப் பெண்ணோடு ரகசிய நட்பில் இருந்த கொப்பர் ஷவ்வின் மனைவி. பல தடவை அவர் ஊடாக வாசனைத் திரவியங்கள், மற்றும் வெளிநாட்டுப் பொருட்களை பெற்று வந்தார். இதனூடாக குறித்த பணிப் பெண் மொஸ்கோவுக்கு எந்த ஒரு தடையும் இன்றி சென்று வந்ததோடு. அதிகார மட்டத்திலும், வேர் ஊன்ற ஆரம்பித்தார். அதன் பின்னரே சோவியத் யூனியனை உடைக்க வேண்டும். அதனைப் பலம் இழக்கச் செய்யவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் மெல்ல மெல்ல அரங்கேறியது. மனைவி ஊடாக பணிப் பெண்… பல வேலைத் திட்டங்களை செய்ய ஆரம்பித்தார்.. இதில் ஒன்று தான்…

கணவர் கொப்பர் ஷவ்வுக்கு மனைவி அடிக்கடி கொடுத்த குடைச்சல்கள். கணவர் சில வேளைகளில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில் இருக்கும் போது. கொப்பர் ஷவ்வின் மனைவி கொடுக்கும் பல ஐடியாக்கள், அவரை மனம் மாற்றியது. மனைவியிடம் வந்து ஐடியா கேட்க்கும் ஒரு கணவராக கொப்பர் ஷவ் மாறினார்.  இதனூடாகவே சிறிது சிறிதாக அமெரிக்க உளவு நிறுவனம், கொப்பர் ஷவ்வை பாவித்து, சோவியத் யூனியை உடைத்ததாக இளைப்பாறிய முக்கிய சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தான் எழுதிய நூலில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இது மிக மிக சுவாரஸ்யமான விடையம்… நீண்டு கொண்டு செல்லும் கதை. இதனை சுருக்கி அதிர்வு இணைய வாசகர்களுக்காக நாம் தந்துள்ளோம்.

அதிர்வுக்காக
கண்ணன்

Contact Us