பிக்பாஸ் ஓடிடி யில் களமிறங்கும் 12 சர்ச்சை பிரபலங்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சின்னத்திரையில் சுமார் 100 நாட்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நேரடியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

இதுவரை விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன்களில் யார் சுவாரசியமாக விளையாடி, டிஆர்பியை எகிற வைத்தார்களோ அவர்களே மீண்டும் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கின்றனர். இதற்கான வேலைகளை தற்போது பிக்பாஸ் தயாரிப்புக் குழு செய்து வருகிறது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த ஓடிடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 12 போட்டியாளர்களுடன் 45 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்வதாக ஏற்கனவே தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் மீதமிருக்கும் போட்டியாளர்கள் யார் என்பது பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர்களை தவிர மீதமிருக்கும் சில பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கடந்த சீசன்களின் பிரபலங்களான பாலா, கவின், ஷெரின், ஜனனி அய்யர், தர்ஷன், சனம் ஷெட்டி, ஜூலி, அனிதா சம்பத், வனிதா விஜயகுமார், லாஸ்லியா, ஹரிஷ் கல்யாண் இவர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இவர்களில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் திருமணம் வரை சென்று சில பிரச்சினையின் காரணமாக பிரிந்தவர்கள். அதற்கு முக்கிய காரணம் நடிகை ஷெரின் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இவர்கள் மூவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

மேலும் இவர்கள் பெயரை சொன்னாலே சர்ச்சை தான் என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி, இன்னமும் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வரும் வனிதா விஜயகுமார், ஜூலி ஆகியோரும் பங்கேற்பதால் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Contact Us